பாடுவோம் பாடுவோம் இயேசுவை
போற்றுவோம் போற்றுவோம் நேசரை
அன்பிலே நம்மை நிரப்பி ஆளுவார் - 2
வான தூதர் சேனையோடு கூடியே
வாழ்க இயேசு என்று சொல்லி பாடுவோம் - 2
பூமியின் குடிகளோட சேர்ந்து நாம்
புண்ணியரைப் போற்றி பாடுவோம் ஓ ஓ - 2
மாறிக்காலம் சென்று மழையும் ஓய்ந்தது
பூமியிலே பூக்கள் பூத்து குலுங்குது - 2
குருவிகளும் பாடும் காலம் வந்தது - 2
காட்டுப்புற சத்தம் கேட்குது பூமியெங்கும் ஓ ஓ - 2
நம்மைப் படைத்த கர்த்தர் இயேசு முன்னிலே
பணிந்து குனிந்து தொழுதுகொள்ள வாருங்கள்
நாம் அவரின் மேய்ச்சலின் ஜனங்களாய் - 2
அவரின் அன்பை பாட வாருங்கள் ஓ . ஓ . . - 2