பார சிலுவைதனை சுமந்து
ஏறி செல்கின்றார் மலை மேல்
லோக பாவம் யாவையும் தன்மேல்
ஏற்றுக்கொண்டாரே - அன்பாகவே
எனக்காய் அழுதிட வேண்டாமே நீ
உனக்காய் அழு என்றார் இயேசு
உனக்காய் அழு என்றாரே
பச்சை மரத்துக்கே இவைகளை செய்தால்
பட்ட மரத்துக்கென்னவோ என்றாரே
பட்ட மரத்துக்கென்னவோ
அறிந்திடாமல் செய்திடும் அவர்களை
மன்னியும் என்றார் - பிதாவிடம்
மன்னியும் என்றார்