பார்வையில்லா குருடனாய்
பாரினில் வாழ்கிறேன்
பாதை தெரியா அறியேன் நான்
பாதையில் வதைகிறேன் - 2
1. ஒளி என்றும் என் வாழ்வில் வந்ததில்லை
மகிழ்வு என்றும் என் வாழ்வில் கண்டதில்லை - 2
ஒளி என்று என் வாழ்வில் வந்திடுவாரோ
மகிழ்வு வென்று என் வாழ்வில் தந்திடுவரோ - 2
2. அடக்கியே அமர செய்தார் பலர்
அருகினில் அன்போடு அழைத்தார் இவர் - 2
அன்பரின் அழைப்பினை பெற்றேனே நான்
அகமகிழ் ஆனந்தம் கொண்டேன் நான் - 2
3. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்
நான் பார்வை அடையவேண்டும் என்றேன் - 2
நம்பிக்கை நலம் தரும் என்றே அவர்
நாதன் கண்களை திறந்து விட்டார் - 2
காண்கிறேன் காண்கிறேன் காண்கிறேன்
என் கண்களைத் திறந்தவரை (படைத்தவரை) காண்கிறேன் - 2
பார்வை எனக்கு தந்தவரை பாரினில் போற்றுவேன்
பாதையாக நின்றவரை பார்முழுதும் சாற்றுவேன் - 2