பாசதலைவரே
எங்கள் நேசத்தலைவரே
எங்கள் இருதயத்தில் புரட்சி செய்த
புரட்சித்தலைவர்
வாழவெச்ச தலைவரே
வாழவைக்கும் தலைவரே
அஞ்சாத சிங்கமே மங்காத தங்கமே
வாழ்க உமது நாமம்
வரவேண்டும் உமது ராஜ்ஜியம்
வாழ்க.. வாழ்க.. வாழ்க.. - 2
உலக தலைவர் நீங்கதானே இயேசப்பா
உமை வாழ்த்தி வணங்கி
போற்றுகிறோம் நாங்கப்பா -2 இந்த
எங்க தலையை உயர்த்தும்
தலைவர் நீங்க தான்
எங்கள் முன்னே செல்லும்
முதல்வர் நீங்க தான். - 2
வாழ்கவே உம் நாமம் வாழ்கவே - வரனுமே
உம் ராஜ்ஜியம் வரும்..- 2 - தலைவா
எங்க தலையை
எங்க தலையை
1. சாதி மத பேதமெல்லாம் உம்மிடமில்லை
அதன் அடிப்படையில் சலுகைகள் நீர்
கொடுப்பதில்லை - 2
தலைவரே... முதல்வரே
உண்மையாய் உம்மை கூப்பிடும்
மக்களுக்கு நன்மை செய்கிறார்
கூப்பிட மறுக்கும் மக்களுக்கும் உம்
கிருபையால் உதவி செய்கிறீர் - 2
2. ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை
அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே (உங்கக்கிட்ட)
நிலைப்பதில்லை - 2
தலைவரே.. முதல்வரே
மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர்
உம்மிடம் உள்ள அனைத்தையும்
மறைத்திட எதுவுமில்லை - என்று
உம் ஜீவனையும் கொடுத்து காட்டினார்
3. லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை
அப்படி செய்யும் நிலைமை உமக்கு என்றும் வருவதில்லை 2
தலைவரே... முதல்வரே
உலகத்தை படைத்தது நீரே - அதை
மக்களுக்கு கொடுத்தவர் நீரே
நல்லவர் தீயவர் மீதும் - நீர்
மழையை பெய்யச்செய்பவரே