துதிப் பாடல்கள்

பாழான நிலத்திலும்

Paazhaana Nilathilum

பாழான நிலத்திலும்

அவாந்தர வெளியிலும்

நீர் என்னை கண்டுபிடித்தீர் -2

நீர் என்னை நடத்தினீர்,

நீர் என்னை உணர்த்தினீர், - 2

தமது கண்மணியைப் போலக் காத்தருளினீர். (உபாகமம் 32:10)

நீர் என்னைக் கொன்றுபோட்டாலும்,

உம் மேல் நம்பிக்கையாயிருப்பேன்; (யோபு 13:15)

நீர் ஒருவரே என்னை வழிநடத்தினார்,

அந்நிய தேவன் எனக்கு இல்லை.

(உபாகமம் 32:12)

நீரே எந்தன் விளக்காயிருக்கிறீர்

என் இருளை வெளிச்சமாக மாற்றுகிறார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு