துதிப் பாடல்கள்

பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே

Paraloga Devanae Parisuthar Yesuvae

பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே

பாவிகளாம் எங்கள் பாவங்களுக்காக

பரிதாபமாக நீர் பலியானிர் இயேசுவே

பரம பிதாவே பரம தந்தையே

பரலோகை விட்டு நீர் பாரினில் வந்து

பாதகராம் எமக்காய் ஜீவனையும் ஈந்தீரே

கூரான இரும்பாணிகளால் செய்யப்பட்ட கிரீடத்தின்

கூரான ஆணிகளால் பரிசுத்த சிரசினில்

அடிக்கப்பட்டீரே அன்பர் இயேசுவே நீர்

பரிசுத்த இரத்தம் சிரசினின்றோடி

ஒழுகும் அக்கோரக் காட்சியினை

யாரால் தாங்கக்கூடிய? எந்தன் இயேசு தேவனே

திருக்கரங்கால்கள் விலாவினின்றும்

திருசிரசினின்றும் திறந்து பாய்ந்தோடும்

ஜீவ இரத்த ஆறை யார் சகிக்கக் கூடும்?

திரு சரீரம் முழுவதும் பிறப்பட்டோராய்

சிலுவையில் தொங்கி துடி துடித்து

இரத்தம் சிந்தும் நேசரை பாவியே நீ நோக்காயோ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு