பரலோக தெய்வமே
பரிசுத்த தெய்வமே
அபிஷேக தெய்வமே
ஆவியான தெய்வமே
என்னை எடுத்துமே
பயன்படுத்துமே =(2)
ஆ...ஆல்லே..லூயா = (4)
பரிசுத்த சிந்தையை
என்னிலே சிருஷ்டியும்
உமக்காய் என்றுமே
வாழ்ந்திட செய்யுமே =(2)
துன்பங்கள் வந்தாலும்
துயரங்கள் வந்தாலும்
ஓடுவேன் ஜெயிப்பேன்
உம்மை பின் தொடர்வேன் =(2)
உள்ளத்தின் ஆழத்தை
திறந்திடும் தெய்வமே
ஜெபிக்கவே உதவுமே
முழுபெலத்துடனே =(2)
உலகத்தில் செலவிடும்
நாட்களை பார்க்கிலும்
உம்மோடு செலவிடும்
நேரம் மேலானது =(2)
தேசத்தின் பாவங்களை
மன்னித்து விடுவியும்
பேரழிவில் நின்று
காத்து இரட்சியும் =(2)