துதிப் பாடல்கள்

பரலோகமா பாதாளமா

Paralogamaa Paadhaalamaa

பரலோகமா ? பாதாளமா ?

பாவி நீ பதிலொன்று சொல்லு

எந்த பாதையில் செல்கின்றாய் நில்லு

பாவத்தின் சம்பளம் மரணம்.... என்று

படித்தாயே மனமே நீ தினமும்

அந்த பாவத்தை நீ தொடர்ந்து செய்தால்

அந்த பாதாளம் பறைசாற்றும் மன்றோ

தன்பிள்ளை தவரொன்று செய்தால் - பெற்ற

தாய் என்றும் வெறுத்திடுவாளோ ? - அந்த

தாயினும் மேலான அன்பு அதை

தளராத மனதோடு நம்பு...

அழிவை தேடி ஓடும் மனிதா - என்

ஆண்டவர் உனக்காக மரித்தார் - அதை

அறிந்தே உணர்ந்தே நீ வாழ்ந்தால்

அவர் பாதத்தை எந்நாளும் பணிவாய்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு