பரலோகத்தின் மகிமையை
தினமும் - வாஞ்சிக்கிறேன்
பூலோகத்தில் -உம் சித்தம் -செய்ய
என்னையே - ஒப்புவிக்கிறேன்
நாதரே -இயேசு நாதரே
நன்மைகளை அருளும் - நேசரே
கருணையே - உருவான - உமது அன்பில்
காலம் எல்லாம் நான் -வாழ்ந்திடுவேன்
கடமையான உமது சத்தியத்திலே
சாட்சியாய் தினமும் நடந்திடுவேன்
நாதரே -இயேசு நாதரே
நன்மைகளை அருளும் - நேசரே -(பரலோக)
பரிசுத்தம் பற்றி தாங்கள் சொன்னதினால்
பரமனே - உம்மை நான் - தரிசித்தேன்
பரலோகம் என்னும் மோட்சத்திலே
உம் கிருபையால் நானும் -இடம் பிடித்தேன்
நாதரே - இயேசு நாதரே
நன்மைகளை அருளும் - நேசரே (பரலோக)
மேய்ப்பனாய் உலகத்தில் வந்தவரே
உம் கைக்குள் நானும் அடங்கிடுவேன்
மகிமையால் நிறைந்து சேவை செய்யும்
உம் தூதானாய் நானும் மாறிடுவேன்
நாதரே -இயேசு நாதரே
நன்மைகளை அருளும் - நேசரே