பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பரிவுடன் துதித்திடுவேன் - அனுதினமும்
அனுதினம் காத்தென்னை
ஆதரித்திடுவோரை -2
அன்பரைக் துதித்திடுவேன்
1. அகிலாண்ட தேவன் அனைத்தும் சிருஷ்டிகர்த்தா
ஆருயிர்நாதன் அருமை இரட்சகா பிரான் -2
மனுடவதாரனை மாசற்ற சீலனை -2
மனதார துதித்திடுவேன்
2. பாரினில் வந்து என்னை பாவத்தினின்று மீட்ட ,
கருணையின் தேவன் கதை தந்த நேயனை -2
மனு உருவானவர் மகிமையின் தேவனை -2
மறவாமல் துதித்திடுவேன்
3. பாவம் அறக்கழுவி பரிசுத்தம் செய்து என்னை ,
பரகதி ஈந்திட பரலோகம் சென்றோரை -2
மகிபனைத் இயேசுவை மாசற்ற தேவை -2
மகிழ்வுடன் துதித்திடுவேன்
4. முத்துராம் சாத்தானின் சதிமோசத்திற்கெல்லாம்
பாரினில் எந்தனன பாது காத்திடுவோனார் -2
அனுதினம் அவளியில் ஜெயம் அளித்திடுவோரை -2
அன்புடன் துதித்திடுவேன்
5. நித்திய பிதா பிள்ளையாக என்னை
ஆண்டு நடத்த ஆட்கொண்டிட்டோரை -2
வல்லமை தேவனே வாக்கு மாறாதவர் -2
வலிமையாய் துதித்திடுவேன்