பரிசுத்தர் இரத்தம் சிந்தும் பரிதாபக் காட்சி - 2
பார்மனமே பாதகராம் மானிடர்க்காக - 2
வேதனையுடன் வேண்டுதல் செய்யும் நேரத்தில் - 2
இரத்தம் சிந்தும் காட்சியைப்பார் அதோ மனமே - 2
ரத்த வேர்வையாலே திரேகம் மெத்தநனைந்து - 2
பாடுபடும் காட்சியைப்பார் அதோ தோட்டத்தில் - 2
துஷ்டர் கூடி தாடி ரோமம் பிடுங்கும் நேரத்தில் - 2
தரணியின் மீட்புக்காக இரத்தம் சிந்தினார் - 2
ஆசை நேசர் அவனிதனில் பாவிகட்காக -2
இரத்தம் சிந்தும் பரிதாப காட்சிதனைப் பார் - 2
வாரினால் அடித்து கதை வதைக்கும் நேரத்தில் - 2
அருமை இயேசு அவனிதனில் இரத்தம் சிந்தினார் - 2
பாவியே நீ பாருனக்காய் பரிசுத்தர் இயேசு - 2
இரத்தம் சிந்தும் பரிதாப காட்சிதனைப் பார் - 2
சிரசினில் முள்முடி சூட்டி மூங்கில் தடியால் - 2
அடிக்கும் வேளை இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் - 2
மானிடர்க்காக மாசற்ற தேவாட்டுக்குட்டி தன் - 2
இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் நீ மனமே - 2
கொல்கத்தாவின் குருசினில் மூன்றாணியில் தொங்கி - 2
துடி துடித்து இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் - 2