துதிப் பாடல்கள்

பயத்தோடு கர்த்தரை

Payathodu Kartharai

பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்

களி கூர்ந்து கர்த்தரைப் பாடுவோம் 2

1. வானாதி வானங்களும் - 2

வணங்கிடும் தேவனவர்

வான தூதர் சேனைகளும்

துதித்திடத் தூய்மை உள்ளவர் - 2

பரிசுத்த மானவர்

பரலோகம் திறந்தவர் - 2

நாளும் பயத்தோடு... வாங்க

பயத்தோடு... என்றும்

பயத்தோடு கர்த்தரை துதிப்போம்

களி கூர்ந்து கர்த்தரைப் பாடுவோம்

வாங்க பயத்தோடு கர்த்தரை துதிப்போம்

2. உன்னதத்தில் வாசம் பண்ணும்

இராஜாதி இராஜனவர் - 2

நம்முடைய துதியினிலும்

வாசம் செய்பவரே - 2

துதித்து பாடுவோம்

தூயவரை.. நாடுவோம் - 2

3. கோடான கோடி மக்கள்

தேடி வரும் தெய்வமகள் - 2

கோடான கோடி நன்மை

துதித்தால் தருபவரவர் - 2

ஆனந்தமாய் பாடுவோம்

ஆண்டவரைப் போற்றுவோம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு