துதிப் பாடல்கள்

பெலனும் அரணும் என் கேடகமும்

Pelanum Aranum En Kedagamum

பெலனும் அரணும் என் கேடகமும்

இரட்சிப்புமானவரே

பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன்

உம்மையே....

என் யேகோவா ஷம்மா

என்னோடு என்றும் நீர்

என் யேகோவா நிசி

என் ஜெயக்கொடி நீர்

என் யேகோவா ராஃபா

என் பரிகாரி நீர்

என் யேகோவா ஷாலோம்

என் சமாதானம் நீர்

தேவன் சகாயர் எனக்கே

எவருக்கும் அஞ்சிடேனே

ஒருபோதும் என்னை விட்டு

விலகுவதில்லை தேவா – 2

பயமின்றி துணிந்து நானும்

சேனைக்குள் பாய்ந்திடுவேன்

உம்மாலே பெலனும் கொண்டு

மதிலையும் தாண்டிடுவேன்

உம்மையே நம்பும் எனக்கு

நித்திய கன்மலை நீர்

உம்மையே நோக்கிடும் நான்

வெட்கமடைவதில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு