பெருமை உள்ளவனுக்கு தேவன்
எதிர்த்து நிற்கிறார்
தாழ்மை உள்ளவனுக்கு அவரே
கிருபை அளிக்கிறார் - 2
நாங்களோ இயேசுவின் நாமத்தை குறித்தே
மேன்மை பாராட்டுவோம் - 2
சிலர் இரதங்களையும்
குதிரைகளையும் குறித்து
மேன்மை பாராட்டுகின்றார்கள் - 2
பொன்னுயிருக்குது பொருளிருக்குது என்று
பெருமை பேசாதே
வீடு இருக்குது நிலமிருக்குது என்று
பெருமை பாராட்டாதே - 2
பணம் ஒன்று தான் வாழ்க்கை
கிடையாதே
அதை நம்பினால் மோட்சம்
கிடைக்காதே - 2
அழகிருக்குது அறிவிருக்குது என்று
பெருமை பேசாதே
உணவிருக்குது உடையிருக்குது என்று
பெருமை பாராட்டாதே - 2
அழகு என்றைக்கும் இருக்கும்
நினைக்காதே
உடல் மண்ணுக்கு என்பதையும்
மறக்காதே - 2
நான் பெரியவன் நீ சிறியவன் என்று
பெருமை பேசாதே
வாயிருக்குது பேசத்தெரியும் என்று - பிறரை
ஏளனமாய் பேசாதே - 2
ஜீவன் நிலையாய் இருக்கும்
நினைக்காதே
இன்றைக்கு படுத்தால்
நாளை நிச்சயம் கிடையாதே - 2
பெலனிருக்குது திடன் இருக்குது என்று கோலியாத்
பெருமை பாராட்டினான்
ஜெபமிருக்குது ஜெயமிருக்குது என்று - தாவீது
கோலியாத்தை முறியடித்தது - 2
நாம் தேவனுடைய நாமத்தை
மகிமைபடுத்தினான்
அவர் நம்முடைய பேரை
பெருமைபடுத்துவார் - 2