துதிப் பாடல்கள்

பேசு பேசு மனமே

Pesu Pesu Manamae

பேசு பேசு மனமே அன்பர் இயேசுவோடு

இன்பத்திலும் துன்பத்திலும் பேசு பேசு மனமே

- அன்பர் இயேசுவோடு

நோவினிலும் நலத்தினிலும் பேசு பேசு மனமே

- அன்பர் இயேசுவோடு

வாழ்வு வந்த போதினிலும் - இயேசுவோடு பேசு

தாழ்வு வந்த போதினிலும் - இயேசுவோடு பேசு

தோல்வியிலும் வெற்றியிலும் - இயேசுவோடு பேசு

மகிழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும்

இயேசுவோடு பேசு - பேசு பேசு மனமே

விடியற்காலை பொழுதினிலே - இயேசுவோடு பேசு

இரவினிலும் பகலினிலும் - இயேசுவோடு பேசு

அந்தி சாயும் வேளையிலே - இயேசுவோடு பேசு

இன்றும் பேசு என்றும் பேசு அன்பர்

இயேசுவோடு - பேசு பேசு மனமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு