துதிப் பாடல்கள்

பிரசன்னத்தில்

Pirasannathil

பிரசன்னத்தில் பிரசன்னத்தில்

நான் இருக்கிறேன்

இயேசுவில் என் இயேசுவில்

நான் மகிழ்கின்றேன் ஓ பிரசன்னத்தில்

அல்லேலூயா - 8

பசும்புல் மேய்ச்சலில் நடத்திச் செல்கிறார்

குளிர்ந்த நீரண்டை சுகம் தருகின்றார்

எந்தன் மீட்பராய் இயேசு இருக்கின்றார்

குறை எனக்கில்லை - 2 ஓ பிரசன்னத்தில்

அல்லேலூயா

இருள் நிறைந்திடும் பள்ளத்தாக்கில் நான்

நடந்த போதிலும் பயமெனக்கில்லை

எங்கள் இயேசுவே உடன் இருக்கின்றார்

என்ன ஆனந்தம் - 2 ஓ பிரசன்னத்தில்

அல்லேலூயா

கருணையும் அருளும் என்னை தொடர்ந்திடும்

வாழும் நாளெல்லாம் என்னை தொடர்ந்திடும்

உந்தன் இல்லத்தில் வாழ்ந்திருப்பேன் நான்

எந்த நாளுமே - 2 ஓ பிரசன்னத்தில்

அல்லேலூயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு