துதிப் பாடல்கள்

போதும் போதும் இந்த உலகத்தின்

Podhum Podhum Indha Ulagathin

போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம்

வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும்... - 2

கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும்

பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும்... - 2

உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது

தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது... - 2

எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது

எங்களின் தெய்வமே எங்களை காருமே... - 2

ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர்

ஆத்தம ஆதாயம் நானும் செய்திட... - 2

அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட

உன்னதர் இயேசுவே வல்லமை தாருமே... - 2

அழிந்திடும் மாந்தர்கள் வெளிச்சம் காணட்டும்

மரிக்கும் மாந்தர்கள் ஜீவனை அடையட்டும்... - 2

தூயரின் இரத்தமே சாபத்தை போக்கட்டும்

தூய்மையாய் வாழ்ந்திட பெலனை ஈந்திடும்... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு