துதிப் பாடல்கள்

பொல்லாத உலகமப்பா

Pollaadha Ulagamappaa

பொல்லாத உலகமப்பா

உன்னை தான் கொல்லுமப்பா

மனந்திரும்பி நீ வாப்பா

உன்னை மகிமையில் சேர்ப்பார் என் இயேசப்பா

ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும்

ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும்

பஞ்சங்களும் கொள்ளைநோய்களும்

பூமியிலே உண்டாகும் ஐயோ அப்பா

கடைசி காலம் என்று நீ உணர்ந்து கொள்

பாதாளம் உண்டென்று நீ அறிந்து கொள்

மீட்பர் ஒருவர் உண்டு என்பதை புரிந்து கொள்

மனம் திரும்பி வந்து அவரைப் பற்றிக் கொள்

சொர்க்கத்தின் திறவுகோல் இயேசுவிடமே

பக்தியாய் நீ நடந்தால் சேர்ந்து கொள்வார் உன்னையே

உலகத்தை நீ வெறுத்து சிலுவையை சுமந்தால்

அடைந்திடுவாய் அன்பின் நித்திய ஜீவனையே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு