துதிப் பாடல்கள்

பொன்னும் வெள்ளியும் என்னிடமில்லையே

Ponnum Velliyum Ennidamillaiyae

பொன்னும் வெள்ளியும் என்னிடமில்லையே

ஏசு ராஜா என்னோடு இருக்கின்றார்

ஏசு ராஜா உன்னோடு இருப்பதினால்

எனக்காய் யாவற்றையும் செய்து முடித்திடுவார்

எனக்குப் பொன்னும் என் ஏசு ராஜா தான்

எனக்கு வெள்ளியும் என் ஏசு ராஜா தான்

எனக்கு எல்லாமே என் ஏசு ராஜா தான்

தாழ்மையில் இருந்து என்னை கன்னோக்கி பார்த்தீரே

கண்ணீர் துடைத்து செழிப்பாய் மாற்றினீரே

எனக்கு ஞானமும் என் ஏசு ராஜா தான்

எனக்கு செல்வமும் என் ஏசு ராஜா தான்

தேவையானது ஒன்றே ஒன்று தான்

ஏசுவின் பாதம் எனக்குப் போதுமே

ராஜாவின் அபிஷேகம் எனக்குப் போதுமே

முதன் முதல் ஏசுவின் ராஜ்ஜியத்தை தேடுவோம்

பின்பு எல்லாம் கூடவே கொடுக்கப்படும்

மேன்மை பாராட்ட என்னிடம் ஒன்றுமில்லை

பெருமையாய் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை

ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்து கொண்டார்

ஏசுவின் சுவிசேஷம் தினம் தினம் சொல்லிடுவேன்

ஏசுவின் ராஜ்யத்திற்காய் அனுதினம் செயல்படுவேன்

ஆவி ஆத்மா சரீரமெல்லாம் என் ஏசு ராஜாவுக்கே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு