போற்றி பணிகிறேன் நான் - பொற்பரணை
போற்றி பணிகிறேன் நான்
ஆற்றி நிர்பந்தனென்னை தேற்றியணைத்தவனை
காற்றிலும் மழையிலும் போர்த்தி மறைத்தவனை - (2)
காட்சி அளித்தவனை எந்தனுக்கு
மாட்சி அளித்தவனை - (2)
தாழ்ச்சி ஒன்றில்லாது தன்னையே தந்தவனை - (2)
சாட்சியாய் நிற்பவனை சர்வ லோக நாயகனை - (2)
அள்ளி அணைத்தவனை - எந்தனையே
கண்ணோக்கி காத்தவனை - (2)
தள்ளியே வைக்காமல் தன்னோடு வைத்தவனை - (2)
வெள்ளி பொன்னிலும் மேலாய் வேண்டல்
அளித்தவனை - (2)
அல்லும் பகலும் மிகலோர் - எந்தனையே
வெல்லாது தள்ளிவைத்து - (2)
எல்லாப் பொல்லாங்கத்திலும் என்னோடு ஒத்துவந்து - (2)
பொல்லாததோஷங்களை போக்கி
தொலைத்தவனை- (2)