துதிப் பாடல்கள்

புது கிருபைகள் தினம் தினம்

Pudhu Kirubaigal Thinam Thinam

புது கிருபைகள் தினம் தினம் தந்து

என்னை நடத்தி செல்பவரே

அனுதினமும் உம் கரம் நீட்டி

என்னை ஆசீர்வதிப்பவரே

என் இயேசுவே உம்மை சொந்தமாக

கொண்டதென் பாக்கியமே

இதை விடவும் பெரிதான மேன்மை

வேறொன்றும் இல்லையே -2

1. நேர்வழியாய் என்னை நடத்தினீர்

நீதியின் பாதையில் நடத்தினீர்

காரியம் வாய்க்க செய்தீர்

என்னை கன்மணி போல் காத்திட்டீர்

2. பாதங்கள் சருக்கின வேளையில்

பதறாத கரம் நீட்டி தாங்கினீர்

பாரமெல்லாம் நீக்கினீர்

என்னை பாடி மகிழவைத்தீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு