புத்தம் புது பாடல் புது பாடல்
நித்தம் நித்தம் இயேசு எனக்கு
தந்த பாடல் - 2
பாவத்தில் வாழ்ந்த என்னை
மீட்டு எடுத்த பாடல்
சாகடிக்க வந்த அந்த
சாத்தானை ஜெயித்த பாடல் - 2
யாருமில்லை என்றிருந்தேன் ஓ... - 2
துணையாய் வந்த பாடல்
பாடல் தந்த தேவனை
பாட வந்தேன் பாடல்
வியாதியில் நான் இருந்தேன்
மருந்தாய் வந்த பாடல்
அன்பை தேடி அலைந்திருந்தேன்
ஆதரவை தந்த பாடல் - 2
கண்ணீரோடு தினம் அழுதேன் ஓ - 2
ஆறுதலை தந்த பாடல்
புழுதியில் கிடந்த என்னை
தூக்கி எடுத்த பாடல்
குப்பையில் வாழ்ந்த என்னை
வரும் நாளில் உயர்த்தும் பாடல் - 2
நம்பினவர் மறந்த போது ஓ.... 2
நம்பிக்கையை தந்த பாடல்