சாரோனின் ரோஜாவே - பள்ளத்தாக்கின் லீலியே
சாலேமின் ராஜாவே எங்கள் மணவாளனே
அதிசயம் செய்யும் தேவன் நீரே
உமக்கு நிகர் ஒருவரில்லை
வான் புறாவே என் உள்ளத்தில்
என்றும் தங்கிட வாருமே - (2)
வாடையே நீ எழும்பு தென்றலே என்றும் வருக
கந்த பிசின்கள் வடிய தோட்டத்தில் என்றும் வீசுக
வாதுமை மரமும் நளதமும்
பலவிதக் கனி மரங்களும்
பூத்து காய்த்து கனி தந்து
உம் வருகைக்காய் காத்திருக்கும் - (2)
என் நேசர் பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
தங்கமயமானவர் பாலைப்போல் வென்மையானவர்
உந்தன் அன்பை விட்டு என்னை
யாராலும் பிரிக்க முடியாது
உந்தன் சிலுவை அன்பிலும்
மேலான அன்பு இல்லையே- (2)