துதிப் பாடல்கள்

சாவில்லாத வீடு அது

Saavillaadha Veedu Adhu

சாவில்லாத வீடு அது சஞ்ஜலம் இல்லா வீடு

சத்தியமான வீடு அது நிதிதியமான வீடு - 2

உனக்கும் எனக்கும் இயேசு அப்பா கட்டிவெச்சாருங்க

அந்த வீட்டுக்குள்ளே நம்மைத்தவிர யாருங்க - 2

1.அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தமில்லேங்க

அக்கம் பக்கம் உறவினர்கள் பந்தமில்லேங்க - 2

மாமியாரும் மருமகளும் சண்டையில்லேங்க

மண்ணவராம் இயேசு அப்பா கட்டிவெச்சாருங்க

- சாவில்லாத வீடு

2. நகையும் நட்டும் உடையும் பட்டும் அங்கே இல்லேங்க

புகையும் வெற்றிலை பிராத்திக்கடை அங்கே இல்லேங்க - 2

சினிமா நாடகம் நாட்டியமும் அங்கே இல்லேங்க

இனிமையான இயேசு அப்பா கட்டின வீடுங்க

- சாவில்லாத வீடு

3. தண்டல்காரன் தடியகாரன் அங்கே இல்லேங்க

கலகம் மிரட்டு திருட்டுகளும் அங்கே இல்லேங்க - 2

பயமில்லாமல் துயரமில்லா வாழும் வீடுங்க

பரமன் இயேசு பரவசமாய் கட்டின வீடுங்க

- சாவில்லாத வீடு

4. பயமில்லாமல் பரிசுத்தவான் தங்கும் வீடுங்க

தேவனோடு ஆனங்தமாய் துங்கும் வீடுங்க - 2

ஜீவத்தண்ணீர் தாகம் தீர்க்கும் தங்க வீடுங்க

ஆவல்தீர அன்பர் இயேசு தந்த வீடுங்க

- சாவில்லாத வீடு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு