துதிப் பாடல்கள்

சபையை கட்டுகிறார்

Sabaiyai Kattugiraar

சபையை கட்டுகிறார்

இயேசு சபையை கட்டுகிறார்

உண்மை கடவுள் இயேசு

தனது சபையை கட்டுகிறார்

தூய ஆவி சக்தியாலே

கட்டி எழுப்புகிறார்

மனிதனுடைய அறிவினாலே

சபையை கட்டவில்லை

புத்திசாலித்தனத்தாலும்

சபையை கட்டவில்லை

ஆவியானவரின் வல்லமையாலே

சபையை கட்டுகிறார்

பாவிகளே மனம் மாற்றி

கட்டி எழுப்புகிறார்

மாயாஜால மந்திரங்களால்

சபையை கட்டவில்லை

மதவாத தந்திரங்களால்

சபையை கட்டவில்லை

நோயை நீக்கி பேயை ஓட்டி

சபையை கட்டுகிறார்

மனதுக்குள்ளே நிம்மதி

தந்து கட்டி எழுப்புகிறார்

தீவிரவாதம் காட்டி மிரட்டி

சபையை கட்டவில்லை

அரசாங்க அதிகாரத்தால்

சபையை கட்டவில்லை

நம்பிக்கை வைக்கும் மக்களை வைத்து

சபையை கட்டுகிறார்

சாட்சியாக நிற்போரை வைத்து

கட்டி எழுப்புகிறார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு