சந்தோஷம் கொண்டாடுவோம் - இத்தாரணியில்
சந்தோஷம் கொண்டாடுவோம்
சந்தோஷமாக வாழுவோம்
ஆதி தேவன் வார்த்தை மாம்சமாகி
நாதன் கிறிஸ்து பிறந்தார்
சந்தோஷமாகப் பாடுவோம் - தாரணியில் கூடுவோம்
மரிமகனாய்ப் பிறந்த இயேசுவை காண்போம்,
மாட்டுக்கொட்டகையிலே
வானபரன் பிறந்திட்டார் - மானிடர்க்காய்
வானபரன் பிறந்திட்டார்
வானலோகம் சேர்க்கவே
நம் மீது வைத்த அன்பிது பார்க்கவே
சந்தோஷம் சந்தோஷமே
தேவ பாலன் பிறந்தார் - இரட்சகராய்
தேவ பாலன் பிறந்தார்
தீர்க்கர் உரைப்படியே
பாவ சாபம் போக்கிப் பாவியை மீட்கவே
சந்தோஷம் சந்தோஷமே
தேவ கோபத்தைப் போக்க - இந்நிலத்தில்
தேவ கோபத்தைப் போக்க
சமாதானம் உய்யவே
சமாதானப் பிரபுவாகவே பிறந்தனர்
சந்தோஷம் சந்தோஷமே