சரணம் சரணம் இயேசய்யா
உந்தன் பாத மலர் அடி வீழ்ந்தேனே - (2)
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் - உம்மை
என்னால் போற்ற இயலாது - (2)
மகா சபைதனில் ஆர்ப்பரிப்பேன் - உம்மை
உயிருள்ள நாள் மட்டும் துதித்திடுவேன் - (2)
நீர் செய்த அதிசயம் ஆயிரமே
ஸ்தோத்திர பலியை நான் படைப்பேன்- (2)
என்னை உமக்கு காணிக்கையாய்
சமூலம் படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் - (2)
தந்தை பிதா திரு குமரா - தூய
ஆவியை நான் என்றும் வணங்கிடுவேன் - (2)
விண்ணில் சேனைகள் படைசூழ - அடிமை
விழுந்து போற்றுவேன். - (2)