துதிப் பாடல்கள்

சர்வ வல்ல தேவன்

Sarva Valla Devan

சர்வ வல்ல தேவன் என் தந்தை என்ற சொந்தம்

பரிசுத்த தேவன் என் பாசம் என்ற பந்தம்-2

அல்லேலூயா ஆனந்தம் அல்லேலூயா பேரின்பம்-2

அனுதினம் இவரை பாடி மகிழ்வேன்

1. தாயின் கர்ப்பத்தில் தாங்கிய தேவன்

ஆயுள் முழுவதும் ஏந்திடும் தேவன்-2

இந்த தேவன் தான் என் சொந்த தேவனே

எந்நாளும் இவரைப் பாடி மகிழ்வேன்

2. வேதனை துன்பங்கள் மாற்றிடும் தேவன்

வியாதிகள் பாவங்கள் நீங்கிடும் தேவன் -2

3. ஆபத்தில் நாசத்தில் காத்திடும் தேவன்

தூதரின் கைகளால் தூக்கிடும் தேவன்-2

4. கூப்பிடும் நேரத்தில் கேட்டும் தேவன்

தேவையான பதில்கள் தந்திடும் தேவன் -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு