சேனை அதிபரே என் சிங்கார ராஜா
உம் சிறகினிலே என்னை சுமந்தீரே
1. வழி - மாறி -நான் சென்ற போது
உம் வசனம் - என்னை - தேற்றினதே
பாதையே நான் மறந்த போது'
உம் கிருபை என்னை பாதுகாத்ததே சேனை
2. உம் மீது பாசம் மறந்த போது
என்னை நேசமாய் நீர் அணைத்தீரே
கருணையே உம்மை மறந்த போது.
உம் மகிமையால் என்னை தாங்கினீரே சேனை
3. பரிசுத்தத்தை நான் வெறுத்த போது
என்னை பாவி என்று தள்ளவில்லையே
கிருபையின் மேல் கிருபை பொழிந்து - என்னை
கிருஸ்தவனாய் வாழ வைத்தீரே சேனை