துதிப் பாடல்கள்

சேனைகளின் தேவனாகிய

Senaigalin Devanaagiya

சேனைகளின் தேவனாகிய

கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்

சர்வவல்ல தேவனாகிய

கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன்

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்

கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

பட்டயத்தை நம்பவில்லையே

என் வில்லையும் நான் நம்பவில்லையே

உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்

வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்

வெட்கப்பட்டுப் போவதில்லையே

மாம்சத்தோடும் சண்டையில்லையே

இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே

இந்த பூலோகத்தின் அதிபதியோடும்

பொல்லாத ஆவிகளோடும்

அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு

ஊர் முழுதும் தூற்றிவிட்டானே

என் தேவன் என்னை தூக்கிவிட்டார்

நிந்தைதனை மாற்றிவிட்டார்

சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு