சிலுவை இயேசுவின் சிலுவை
அன்றும் இன்றும் அன்பைப் பொழியும்
சிலுவை இயேசுவின் சிலுவை
மன்னிப்பு அருளும் மாறாத சிலுவை
மாந்தரை மீட்கும் பேரின்ப சிலுவை- (2)
மகிமையின் வாழ்வை அருளும் சிலுவை - (2)
மாபரன் இயேசு தொங்கிய சிலுவை - (2)
அன்பர் சிலுவை அது அன்பின் சிலுவை - (2)
கள்வனை கவர்ந்த காருண்யா சிலுவை
கனிவுடன் ஏற்று பரம் சேர்த்த சிலுவை - (2)
உறவினை புதிதாய் உருவாக்கும் சிலுவை - (2)
உலகோரை மீட்கும் உன்னத சிலுவை - (2)
மீட்பர் சிலுவை அது மீட்பின் சிலுவை - (2)
மனிதனும் இறைவனும் இணைகின்ற சிலுவை
மாந்தரின் வறுமை வாழ்வூட்டும் சிலுவை
கருணையை தயவாய் அருளிடம் சிலுவை
அருவியாய் கிருபை பொழிந்திடும் சிலுவை - (2)
ஜெய சிலுவை அது வெற்றி சிலுவை