துதிப் பாடல்கள்

சிறு வயதில் இருந்து

Siru Vayadhil Irundhu

சிறு வயதில் இருந்து சுமந்தவரே,

யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே -(2)

உங்க தோளில் இருந்த சுகமும்,

உங்க முத்தத்தில் இருந்த அன்பும்,

மறக்க முடியல, அத விட்டு வாழ தெரியல -(2)

உங்க அன்பு பெருசு, கிருபையும் பெருசு

ஆற்றி தேற்றி அரவணைக்குற,

நீங்க மட்டும் தான் பெருசு -(2)

அரவணைப்பவரே உமக்கு ஆராதனை,

ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை -(2)

1) நீங்க தூக்கும் போது, என்ன கொஞ்சும் போது

பேரானந்தம் கொள்கிறேன் -(2)

உங்க கைகளில் இருக்கும் போது.

உலகை மறக்கிறேன்,

உங்க நிழலில் நடக்கும் போது,

என்னையே மறக்கிறேன்;

இயேசையா இயேசையா,

நீங்க மட்டும் போதுமையா -(2) ...(உங்க)

2) நான் அழும் போது, இல்ல விழும் போது,

உம் கரம் என்னை தேடி வருகுதே -(2)

நீர் என்னை பிடிக்கும் போது,

பயத்தை மறக்குறேன்,

உம் சமுகம் இருக்கும் போது,

குறைவை மறக்குறேன்;

இயேசையா இயேசையா,

நீங்க மட்டும் போதுமையா -(2) ...(உங்க)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு