சிறுபிள்ளையைப்போல் மாறாவிட்டால்
பரலோகத்திலே இடமே இல்லை - 2
ஆயிரம் துதித்தாலும்
அதிகநேரம் ஜெபித்தாலும் - 2
இருதயம் மாறாவிட்டால்
இருப்பதில் ஒன்றும் இல்லை
உபவாசம் இருந்தாலும்
உறங்காமல் ஜெபித்தாலும் - 2
உள்ளத்தில் உண்மையில்லையே
பரலோக நன்மை இல்லையே
வெண்ணாடை அணிந்தாலும்
வேதத்தை கையில் எடுத்தாலும் - 2
அன்பு உனக்கு இல்லையே.. ஏ
உனக்குள் இயேசு இல்லை - 2
ஆவியிலே துதித்தாலும்
அன்னியபாஷை பேசினாலும் - 2
மன்னிக்கும் மனம் இல்லையே
மன்னிப்பு உனக்கு இல்லையே - 2