சிறுவன் எனையும் பெலனால் நிரப்பும்
அடிமை என்னையும் கண்ணோக்கும் தேவா - (2)
உம் திரு வார்த்தைகள் எனக்குத் தாரும்
உந்தனின் ஆவியை நிறைவாய் ஊற்றும் - (2)
ஒன்றுமில்லாத ஏழை நானையா
நீர் இல்லையானால் பயன் ஏதும் இல்லை
ஒப்புவிக்கிறேன் இந்நேரம் உமக்கு
பேசிடும் தேவா உம் அருள் வார்த்தை தாரும் - (2)
இயேசுவின் பெயரால் அற்புதம் செய்திடும்
சாத்தானை வென்று ஜெயமதை தாரும்
உந்தனின் ஆவியால் புதுவாழ்வுத் பெறட்டும்
ஜீவ வசனத்தால் மாறட்டும் ஜீவியம் - (2)
கண்ணீருடனே வந்தோர் ஏராளம்
அன்னாரை தேற்றி ஆறுதல் செய்திடும்
கவலைகள் அனைத்தும் போக்கியே ஆற்றும்
தேறுதல் தந்து அருட்காட்சி தாரும்- (2)