தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னையும் பெயர் சொல்லி அழைத்தாரே - 2
தாயினும் மேலாய் என்னை நேசித்தாரே
தாங்கி தாங்கி என்னை சுமந்தாரே
1. நமக்காக அந்த சிலுவையிலே
தன்னையே பலியாக தந்தாரே - 2
உன்னையே மீட்க தன்னையே தந்தாரே
தம் அன்பை உனக்கு காட்டினாரே - 2
2. என் வாயினால் உம்மை துதிப்பேன்
அநேகர் நடுவிலே உம்மை புகழுவேன் - 2
உம்மையே பாட என்னையே படைத்தீரே
புகழ்ந்து பாட பாடல் தந்தீரே - 2