தகுதி இல்லா என்னையுமே தகுதியாக்கினீர்
பெலனில்லா என்னையுமே பெலப்படுத்தினீரே-2
தகுதியாக்கினீர் பெலன் தந்தீர்-2
தூக்கி எடுத்தீரே தோளில் சுமந்தீரே-2
1. பாவியான எந்தன் மீதும் பாசம் வைத்தீரே
துரோகியான என்னையுமே துதிக்க வைத்தீரே-2
அப்பா நன்றி இயேசப்பா நன்றி-2
பாசம் வைப்பேனே -உம்மை
பாடித் துதிப்பேனே-2
2. உதவியற்ற எனக்கும் நீர் உதவி செய்தீரே
உண்மையற்ற எனக்கும் நீர் ஊழியம் தந்தீரே-2
அப்பா நன்றி இயேசப்பா நன்றி-2
உதவி செய்வேனே -உண்மையாய்
ஊழியம் செய்வேனே-2
3. பாடு பட்ட எனக்கும் நீர் ஆறுதல் தந்தீரே
பட்டுப் போன எந்தன் வாழ்வை துளிர்க்க வைத்தீரே-2
அப்பா நன்றி இயேசப்பா நன்றி-2
ஆறுதல் செய்வேனே -உம்மில்
அன்பு வைப்பேனே-2