தேடி வந்த என் மீது தேற்றுகிற ஆவியை
ஊற்றினீரே -இயேசுவே, தேற்றரவாளன் நீரே
1. கவலை கண்ணீரோடு வாழ்ந்திருந்தேன்
கர்த்தரே என்னை தேடி கடந்து வந்தீர்
உம் ஆவியை என் மீது இலவசமாய் - ஊற்றி
அற்புதமாய் - தேற்றினீரே - என்னை
ஆறுதல் படுத்தினீரே (தேடிவந்த)
2. பாவத்தின் பிடியினிலே வாழ்ந்திருந்தேன்
பரிசுத்தர் என்னை தேடி கடந்து வந்தீர்
பரிசுத்தா உம் ஆவியால் இலவசமாய் -என்னை
சுத்தவானாய் மாற்றினீரே சுகம் பெலன் எனக்குத்
தந்தீரே (தேடிவந்த)
3. பாகாலை வணங்கி இருந்தேன் - வாழ்க்கையிலே
வசமாய் கெட்டு அலைந்தேன் - அவன் - பிடியில்
நல்லவராம் தேவனின் நல் - ஆவியால் -இன்று
இரட்சிப்பை - அடைந்துவிட்டேன் நான் பரலோகில்
வீற்றிருப்பேன் நான்(தேடிவந்த)