துதிப் பாடல்கள்

தேனினும் மதுரமாம்

Theninum Madhuramaam

தேனிலும் மதுரமாம் இயேசு மகராஜா

தேற்றிடும் தெய்வமாம் எங்கள் குல ரோஜா

கானகத்து தேசனாம் கண்மணி ராஜா

சந்த உள்ளத்தை மாற்ற வந்த புது ரோஜா - தேனிலும்

1. பூக்களில் சிறந்த புண்ணியர் இயேசு

பாருக்கே பலியான பரமன் என் இயேசு

பரலோக வாழ்வை தந்த வான் புகழ் நல்ல இயேசு

வழுவாமல் காத்திடுவார் கண்மணி கர்த்தர் இயேசு - தேனிலும்

2. உலகம் பாவத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது

உன்னை அழைத்தவர் உத்தம தேவனே,

உன்னை அவர் அறிந்து ஆசீவாதம் தினம் தந்து

மகிமையின் ராஜ்ஜியத்தில் உன்னை கொண்டு சேர்ப்பார் - தேனிலும்

3 பாடுகள் பெரிதென்று பயந்து போகாதே

ராஜியத்திற்கு அழைத்தவரை விட்டு விலகாதே

மன்னவன் இயேசு இருக்க எதற்கும் அஞ்சாதே

மனம் திரும்பி வாழ்ந்து மகிமையில் நிலைத்திடு - தேனிலும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு