தினமும் தியானித்து மகிழ்ந்திடுவோம்
கர்த்தரின் வேதத்தை கருத்துடன் நாம் ஆராய்ந்து
1. கர்த்தரின் வேதத்தில் பிரியமாய் இருந்துமே இரவுபகலாக - 2
அவருடைய வேதத்தை தியானிப்போன் பாக்கியவான் என்றாரே
2. வேதமாம் வெளிச்சத்தில் நடந்திடவே நம்மை இறைவன்
அழைத்ததால் - 2 வெளிச்சத்தின்படி நாம் நடந்து ஜீவிப்போம் விண்ணுலகம் சேரவே - 2
3. பாதைக்கு தீபமும் பேதைக்கு ஞானமும் வேதம் ஆகையால் - 2
இருளினிலே நாம் இடறி விழாமல் முடிவுவரை நடப்போம் - 2
4. களங்கமில்லாத ஞானப்பாலாம் திரு வேதம் ஆகையால் - 2
புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல் தினம் தினம் அருந்திடுவோம் - 2
5. ஆத்மீக ஆகாரம் ஆகும் கர்த்தரின் வேதம் ஆகையால் - 2
ஆத்மீகம் பிழைத்துப் பெலனடைந்திடவே தினம் தினம் புசித்திடுவோம் - 2
6. வேதத்தின் படியே நடந்திடுவோர்கள் உத்தமர்கள் என்றார் - 2
உத்தம மார்க்கத்தாராகவே நாமும் ஒழுங்குடன் நடந்திடுவோம் - 2