தியாகம் செய்தீர் எனக்காய்
இயேசுவே சிலுவையில் - 2
எனக்காக வா... எனக்காகவா
நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2
1. சிலுவை சுமந்தது எனக்காகவா - நீர்
சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2
சிரசினில் முள்முடி எனக்காகவா நீர் - 2
நீர் வந்தது இதற்காகவா
2. சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில்
சிவந்த கசையடி எனக்காகவா - 2
கசப்பான காடியும் எனக்காகவா - 2
நீர் வந்தது இதற்காகவா
3. கல்வாரி ஏறியதெனக்காகவா - அங்கு
கடும் துயர் அடைந்தது எனக்காகவா - 2
சிலுவையில் மரித்தது எனக்காகவா - 2
மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தது எனக்காக
எனக்காகத்தான் எனக்காகத்தான்
நீர் செய்த தியாகம் (யாவும்) எனக்காகத்தான் - 2