துதி கன மகிமை உமக்கே செலுத்துவோம்
தூய ஆவியே உமக்கே செலுத்துவோம் - 2
தூயாதி தூயவரும் நீரே
கர்த்தாதி கர்த்தரும் நீரே – 2
1.உன்னதங்களில் உயர்ந்தவரே
உயிரோடெழுந்து வாழ்பவரே - 2
மகத்துவமானவர் நீரே
மகிமை நிறைந்தவர் நீரே - 2
2.துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
தூதர் கனங்களால் போற்றப்படுபவரே - 2
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
பரலோக ராஜாவும் நீரே - 2
3.இதுவரையில் நடத்தினீரே
எபிநேசரே இனியும் நடத்துவீரே - 2
மேக ஸ்தம்பமும் நீரே
அக்கினி ஸ்தம்பமும நீரே - 2