துதிப் பாடல்கள்

துதிகளின் மத்தியில் வாசம் செய்வரே

Thudhigalin Mathiyil Vaasam Seyvarae

துதிகளின் மத்தியில் வாசம் செய்வரே

தூதர்கள் போற்றும் எங்கள் தூயவரே

துதிக்கும் பாத்திரம் என்றும் நீர்தானே

துதி கன மகிமை என்றும் உமக்குத்தானே இயேசையா - 2

உம்மை துதிக்கிறோம் தொழுகிறோம் துதிக்கு பாத்திரரே

நல்லவரே வல்லவரே வாழ்வு தந்தவரே

கேரூபின் சேராபீன்கள் உன்னதத்தில் உம்மை துதித்திட

கோடான கோடி தூதர் உம்மை புகழ்ந்து பாடிட

மகிமையில் வாசம் செய்யும் மன்னவரும் நீர்தானே

சேனைகளின் கர்த்தராம் பரிசுத்தரும் நீர்தானே

பவுலும் சீலாவும் இரவில் சிறையில் துதித்ததால்

அஸ்திபாரம் அசைந்து கதவு திறந்து கட்டுகள் கழன்றது !

துதித்தால் விடுதலை கொடுப்பவர் நீர்தானே

கட்டுகளை அறுத்திடும் துதிகளின் நாயகனே

மரண இருள் பள்ளத்தாக்கில் நடந்த வேளையில்

மேய்ப்பனே கோலும் தடியும் கொண்டு என்னை நடத்தினீர்

உன்னதரே உம்மன்பு உலகினில் பெரியது

உத்தமரே உம் பாசம் உறவுகளில் சிறந்தது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு