துதிப் பாடல்கள்

துதிக்கு பிரசித்தமே இயேசு ஏன்னும் நாமமே

Thudhikku Pirasithamae Yesu Ennum Naamamae

துதிக்கு பிரசித்தமே இயேசு என்னும் நாமமே

தூயோனே உம் கிருபை எங்களின் நல்சிலாக்கியமே

விசித்திர கிரியை செய்வோனே முழு உலகம் எங்கும்

ஈர்ப்பின் துருவம் நீர்தானே உம்மை பாடி போற்ற

ராஜாதி ராஜனாக கர்த்தாதி கர்த்தனாக

ஒருவராய் அதிசயங்கள் செய்வோனே

வானங்களை ஞானமாக படைத்தோனே

தண்ணீருக்கு மேலாக பூமியை பரப்புனீரே

பெரிய சுடர்களையும் உண்டாகி மகிழ்ந்தீரே

மாம்சமான அனைத்திற்கும் ஆகாரம் கொடுப்பீரே

மகிபனே மெய்க்கீர்த்தியே உம் கிருபை என்றுமுள்ளதே

தேவாதி தேவனாக இரட்சிப்பின் வேந்தனாக

எங்களின் நடுவில் உயர்ந்து நிற்போனே

தலைமுறை தலைமுறையாக வருபவரே

அனாதையாய் அலைந்த என்னை ஆற்றியே தேற்றினீரே

அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாய் மாற்றினீரே

அழைத்த மெய் அழைப்பினாலே இதுவரை நடத்தினீரே

தாழ்விலே நினைத்தீரே உம் கிருபை என்றுமுள்ளதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு