துதியே துதியே துதித்திடுவேன்
தூயாதி தூயவரே உம்மை
துதிக்குப் பாத்திரர் நீரல்லோ
துதித்து புகழ்ந்து பாடிடுவேன் - 2
1. வானாதி வானங்களும் கொள்ளா
வல்லமையுள்ள தேவன் நீரே - 2
மகிமை நிறைந்த சொரூபியே
மகாதேவனும் நீரல்லோ - 2
2. அற்புதம் செய்பவர் நீரல்லோ
அதிசயமானவர் நீரல்லோ - 2
சேனைகளின் கர்த்தர் நீரல்லோ
ஜெயம் தரும் கிறிஸ்துவும் நீரல்லோ - 2
3. ஏழைக்கு பெலன் நீரல்லோ
எளியோர்க்கு திடன் நீரல்லோ - 2
திக்கற்றவர்க்கு துணை நீரே
அனாதைகளுக்கு அடைக்கலமே - 2