துதிப் பாடல்கள்

துணை ஏதும் இல்லை

Thunai Edhum Illai

துணை ஏதும் இல்லை இயேசு நாதா

பாழாய்ப்போன இவ்வுலகில்

தனியாய் இருந்தேன் தவியாய் தவித்தேன்

உம்மையன்றி யாரோ

பெற்றார் உற்றார் என்னை கைவிட்டாலும்

நல்லார் நற்றார் என்னை தள்ளி வைத்தாலும்

தாயின் கருவில் என்னை கண்டீர்

தோளில் போட்டு சுமந்து வந்தீர்

நீரே அல்லாமல் தஞ்சம் இல்லை

இறைவா இயேசு நாதா

ஏழை என்னை நடத்தும் இறைமைந்தனே

மோட்சம் வரை நீர் எந்தன் துணை

திகையாதே மகனே என்றவர் நீரே

கடைசி நால்வரையும் என்வழி நீரே

வலக்கரத்தால் என்னை தாங்கி நடத்தும்

இறைவா இயேசு நாதா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு