துதிப் பாடல்கள்

துணையாளரே தேற்றிடும் தேற்றரவாளனே

Thunaiyaalarae Thetridum Thetraravaalanae

துணையாளரே தேற்றிடும் தேற்றரவாளனே

தயைசெய்தீரே தடையாவும் தகர்ந்துபோகவே

திறப்பில் நின்றிடும் என் கைகள் தளராமல்

திடன் தந்தீரே என் தாபரமானீரே

நான் கைகளை உயர்த்தி துதித்திட துதித்திட கிருபையும் பெருகுதே

நான் முழங்காலை முடக்கி ஜெபித்திட ஜெபித்திட உம் தரிசனம் கிடைத்ததே

எனக்கு முன்குறித்ததை நிறைவேற்றி முடித்திட

என் மேல் கண்களை வைத்து அனுதினம் போதித்தீர்

எளியவனான என்னை உயர்த்த

எட்டாத பெரிய காரியங்கள் அறிவித்தீர்

ஏற்ற காலத்திலே மழை பெய்ய செய்தீர்

எல்லைகள் யாவையும் விஸ்தாரமாக்கினீர்

எண்ணிலா நன்மைகள் எனக்காக செய்கின்றீர்

மலைகளை பெயர்க்கவும் குன்றுகளை தகர்க்கவும்

மேலான விசுவாசம் எனக்குள்ளே வைத்தீர்

மந்தையை சேர்த்திடவும் மேய்ச்சலில் நடத்திடவும்

மங்காத பிரசன்னத்தால் மனதினை நிறைத்தீர்

மேகஸ்தம்பம் போல என்னை சூழ்ந்துகொண்டீர்

மறைவிட பொக்கிஷங்கள் பரிசாக தந்தீர்

மண்ணான என்னையும் மறுரூபமாக்கினீர்

இயல்பான வாழ்வு தந்து என்னை இயக்கிடும்

இரக்கத்தின் ஐஸ்வர்யம் நீர்தானே இயேசுவே

இலைகள் உதிராமல் கனி தந்து நிரப்பி

இடம் கொண்டு பெறுக செய்யும் நீர் போதும் எனக்கு

இம்மட்டும் ஜீவன் சுகம் பெலன் தந்தீர்

இரட்சிப்பின் ஊற்றுகள் சுரந்திட செய்தீர்

இஸ்ரவேல் என்று பெயர் சொல்லி அழைத்தீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு