துதிப் பாடல்கள்

துயரத்தில் வாடும் மனிதா

Thuyarathil Vaadum Manidhaa

துயரத்தில் வாடும் மனிதா

சிலுவையின் அருகில் வராயோ

உனக்காக இயேசு இரத்தம் சிந்தினார்

உனக்காக இயேசு பாடுகள் பட்டார்

உனக்காக இயேசு காயங்கள் ஏற்றாரே

உனக்காக இயேசு உயிரை ஈந்தாரே

மனிதன் செய்த பாவத்தினால்

மகிமை இழந்து போனானே

மனிதனை மீட்க சிலுவையிலே

தன்னுயிர் ஈந்தார் உனக்காக

கைக்கால்கள் ஆணிகள் காயங்களால்

கருணை தேவன் கதறினாரே

கள்வர்கள் மத்தியில் கழுமரத்தில்

தன்னுயிர் ஈந்தார் உனக்காக

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும்

தேவனின் மாசற்ற செம்மறி

அடிக்கப்பட்டார் நொறுக்கப்பட்டார்

தன்னுயிர் ஈந்தார் உனக்காக

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு