துதிப் பாடல்கள்

உம் கிருபை எனக்கு போதுமய்யா

Um Kirubai Enakku Podhumayyaa

உம் கிருபை எனக்கு போதுமய்யா

வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா

கிருபை கிருபை

கிருபை கிருபை

1. நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்

அப்பா உம் கிருபை தானே

சூழுநிலை எல்லாம் மாறினப் போதும்

காத்ததும் கிருபை தானே - 2

2. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்

காத்தது கிருபை தானே

விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட

பெலன் தந்த கிருபை தானே - 2

3. மலைகள் எல்லாம் விலகினப் போதும்

விலகாத கிருபை தானே

மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும்

மாறாத கிருபை தானே - 2

4. அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்

அப்பா உம் கிருபை தானே

ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி

பாடுவேன் கிருபையை பாடிடுவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு