துதிப் பாடல்கள்

உம் முகம் பார்க்கணும் இயேசையா

Um Mugam Paarkkanum Yesaiyaa

உம் முகம் பார்க்கணும் இயேசையா

உம்முடன் பேசணும் இயேசையா

உம்மில் உறவாடணும் இயேசையா - 2

உம்மில் உயிர் வாழணும் இயேசையா -

கருவினில் எனை அறிந்தீர்

உமக்காக பிரிந்தெடுத்தீர்

சுக வாழ்வு தந்தீரையா

அப்பா பிதாவே என்று கூப்பிடும் பாக்யம் தந்தீர்

நன்றி சொல்வேனையா - 2

தண்ணீரை கடந்தேன் நெருப்பினில் நடந்தேன்

என்னோடு இருந்தீரையா

தண்ணீரில் மூழ்காமல் நெருப்பினில் வேகாமல்

கிருபையாய் காத்தீரையா - 2

யார் என்னை மறந்தாலும்

நினைக்காமல் போனாலும்

நீர் என்னை அணைக்கின்றவர்

துரோகமே செய்தாலும்

தூக்கி எனை எறிந்தாலும்

மார்போடு அணைக்கின்றவர் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு