உம் சமூகம் வந்து நிற்கிறேன் நான்
உம் சமூகம் வந்து நிற்கிறேன்
உம் சாயலாக மாறத்தானை யா இன்று
உந்தன் முன்பாய் வந்து நிற்கிறேன்
1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்
விண்ணவர் எந்தன் சுவாசம் எனக்குள் வைத்தீர் -2
உம் சாயலில் தானே என்னை உண்டாக்கினீர்
உம் ரூபமாக தானே என்னை உருவாக்கினார் -2
2.அனைத்தையும் ஆளுகை செய்ய என்னை படைத்தீர்
அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதேன்றீர் -2
உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததால் -நானே
சாபமாகி போனேன் தேவ சாயல் இழந்து நானே -2
3.சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை
என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தார் -2
என் அக்கிரமங்கள் ஏற்றார் என் மீறுதல் சுமந்தீர்
என்னை சாயலாக மாற்ற உம் ஜீவனும் தந்தீர் -இயேசுவே -2
4.குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க
முன்குறித்தாரோ என்னை தெரிந்து கொண்டீரே -2
என்னை நீதிமானாக மாற்றுபவர் நீரே
உந்தன் மகிமையால் என்னை கொண்டு சேர்ப்பிப்பவர் நீரே -2